/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிரியாணி சாப்பிட்டுபணம் தர மறுத்தவர் கைது
/
பிரியாணி சாப்பிட்டுபணம் தர மறுத்தவர் கைது
ADDED : அக் 12, 2025 01:42 AM
மகுடஞ்சாவடி;மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ரம்ஜான்கான், 45. இவர் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பஸ் ஸ்டாப் அருகே, பிரியாணி கடை நடத்துகிறார். அங்கு நேற்று மதியம், 1:00 மணிக்கு, மகுடஞ்சாவடியை சேர்ந்த கூலித்தொழிலாளி பசுபதி, 29, வந்து, பிரியாணி சாப்பிட்டார். ஆனால் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றார்.
ரம்ஜான்கான் மறித்து கேட்டபோது, 'என்னிடமே பணம் கேட்கிறாயா' என, தகராறு செய்தார். தொடர்ந்து ரம்ஜான்கானை தாக்கி, அங்கிருந்த பாத்திரத்தை துாக்கி, சாலையில் வீசினார். காயம் அடைந்த ரம்ஜான்கான், இடைப்பாடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மகுடஞ்சாவடி போலீசார் விசாரித்ததில் குடிபோதையில் பசுபதி தகராறு செய்தது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.