ADDED : டிச 02, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், அன்னதானப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில், மூணாங்கரடு பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக இருவர் நின்றிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடினார். மற்றொருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் சேலம் தாதகாபட்டி, தாகூர் தெருவை சேர்ந்த பூபதி, 24, என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து. 1.300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை அன்னதானப்பட்டி போலீசார் கைது
செய்தனர்.

