/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஐ.டி., ஊழியரை கத்தியால் கீறியவர் கைது
/
ஐ.டி., ஊழியரை கத்தியால் கீறியவர் கைது
ADDED : ஜன 04, 2026 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: மேட்டூரை சேர்ந்த ஐ.டி., ஊழியர் ஆனந்த், 33. இவர் கடந்த, 31ல், 'போர்டு' காரில் மதுரையில் இருந்து சேலம் வந்தார். இரவு, 7:15 மணிக்கு மல்லுார் டவுனில், ஆனந்த் ஓட்டிச்சென்ற கார், எதிரே, பைக்கில் வந்த மூக்குத்திப்பாளையத்தை சேர்ந்த ஜீவா, 35, மீது மோதும்படி சென்று நின்றது.
இதுகுறித்து ஆனந்த்திடம், ஜீவா கேட்டபோது, அவர்கள் இடையே வாக்கு
வாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரம் அடைந்த ஜீவா, பைக் கீ செயினில் இருந்த சிறு கத்தியால், ஆனந்த் கையை கீறியுள்ளார். அவர் புகார்படி, மல்லுார் போலீசார் விசாரித்து, ஜீவாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

