/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில் பயணியிடம் மொபைல் திருடியவர் கைது
/
ரயில் பயணியிடம் மொபைல் திருடியவர் கைது
ADDED : ஜூன் 17, 2025 01:10 AM
சேலம், மைசூரு-துாத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை சேலம் வழியாக சென்றது. எஸ். 9 பெட்டியில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நாகராணி என்ற பெண் பயணித்தார்.
நள்ளிரவு, 12:30 மணிக்கு தர்மபுரியை கடந்து, சேலம் நோக்கி ரயில் வந்தபோது நாகராணியின் கைப்பையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.இது குறித்து, ரயிலில் ரோந்து வந்த போலீசாரிடம் நாகராணி புகார் அளித்தார். உடனடியாக தர்மபுரி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ரயில்வே சிறப்பு எஸ்.ஐ., தங்கராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
திருட்டு போன பையில் இருந்த மொபைல்போன் இருக்கும் இடத்தை, சைபர்கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். அதன் சிக்னல் மூலம் மொபைல்போன், பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷனில் இருப்பது தெரியவந்தது.
அங்கு விரைந்த போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்தில், ஒடிசா மாநிலம், பூரி மாவட்டம், காகர்பூர் பகுதியை சேர்ந்த ஷாஜிக் என்ற ராஜன், 32. என்பது தெரியவந்தது. கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த, நாகராணியின் பையை மீட்டு மொபைல்போனை பறிமுதல்
செய்தனர்.
சேலம் ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவசெந்தில் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.