ADDED : டிச 23, 2024 10:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிப்பட்டி: கள்ளக்குறிச்சியை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன், 40. இவர் கடந்த, 11ல் கருமாபுரம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த, சேலம், கொண்டலாம்பட்டி பைபா ைஸ சேர்ந்த கார்த்தி, 31, கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டனிடம் இருந்த மொபைல் போன், 3,000 ரூபாய், ஏ.டி.எம்., கார்டை பறித்துச்சென்றார். மணிகண்டன் புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரித்து, நேற்று முன்தினம் கார்த்தியை கைது செய்தனர்.

