ADDED : ஜூலை 08, 2026 04:40 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்:மேட்டூர்,
4 ரோடு அருகே, நீர்வளத்துறை பழைய ஆய்வு மாளிகை உள்ளது. அங்கு நேற்று
மாலை, நீர்வளத்துறை உதவி பொறியாளர் பிரசாந்த்(கட்டடம்),
சென்றபோது, உள்ளே இருந்து சாக்கு மூட்டையுடன் ஒருவர் வெளியே வந்தார்.
அவரிடம் விசாரித்தபோது, மேச்சேரி, அரங்கனுார், கல்கோட்டையை
சேர்ந்த கூலித்தொழிலாளி மாசிலாமணி, 36 என தெரிந்தது. சாக்கு
மூட்டையை பிரித்து பார்த்தபோது, 8.5 கிலோ காப்பர் ஒயரை
திருடிச்செல்வது தெரிந்தது. இதுகுறித்து பிரசாந்த் புகார்படி,
மேட்டூர் போலீசார் விசாரித்து, மாசிலாமணியை கைது செய்தனர்.
