தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆசிரியைக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

ஆசிரியைக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

ஆசிரியைக்கு மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : மே 11, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: ஓமலுார், சக்கரசெட்டிப்பட்டி, புதுக்கடை காலனியை சேர்ந்-தவர் சத்யா, 38. இவரது கணவர் இறந்த நிலையில் இரு மகன்க-ளுடன் வசிக்கிறார். பொட்டியாபுரம் காலனியை சேர்ந்தவர் கங்கை அமரன், 36. இவரும், சத்யாவும் பழகியுள்ளனர்.

சத்யா, பி.எட்., படிக்க கங்கை அமரன் பணம் கொடுத்து உதவியுள்-ளனார். 2023ல் சத்யா, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.பின் கங்கை அமரனுடன் பேசுவதை, சத்யா நிறுத்தினார். கங்கை அமரன், திருமணம் செய்துகொள்ளும்படி சத்யாவிடம் கூறி வந்துள்ளார். கடந்த, 8ல் மகன்களுடன் காமலாபுரம் பிரிவு அருகே சத்யா சென்றபோது, கங்கை அமரன் வாக்குவாதம் செய்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சத்யா புகார்படி ஓமலுார் போலீசார் வழக்குப்பதிந்து, நேற்று முன்தினம் கங்கை அமரனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us