ADDED : ஜூன் 21, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்,
சாமிநாதபுரத்தை சேர்ந்த தொழிலாளி தமிழரசன், 43. நேற்று
முன்தினம், 4 வயது பெண் குழந்தையிடம் சில்மிஷம் செய்ததாக கூறி,
ஊர்மக்கள் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், ஏற்கனவே சில்மிஷ வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளி
வந்தது தெரிந்தது. பின் அவர், சூரமங்கலம் மகளிர் போலீசில்
ஒப்படைக்கப்பட்டு, நேற்று கைது செய்யப்பட்டார்.
