/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஐஸ்கிரீம் சாப்பிட்டு சாவகாசமாக திருடியவருக்கு வலை
/
ஐஸ்கிரீம் சாப்பிட்டு சாவகாசமாக திருடியவருக்கு வலை
ADDED : ஜூன் 06, 2025 02:32 AM
ஏற்காடு, ஏற்காடு, லேடீஸ் சீட் பிரதான சாலையை சேர்ந்தவர் ரமேஷ் கிருபாகரன், 48. இவர், சென்ட், மிளகு, காபி விற்கும் கடை வைத்துள்ளார். அந்த கடையில் பணிபுரியும் பெண், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, கடையை மூடிவிட்டு, வழக்கம்போல் அங்குள்ள மறைவான இடத்தில் சாவியை வைத்துச்சென்றார். இதை பார்த்த ஒருவர், அந்த பெண் சென்றதும் சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்றார்.
கடையில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை கவனிக்காத அவர், மெழுகுதிரியை பற்ற வைத்து கடையில் இருந்த, 5 ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட்டார். பின், 2,400 ரூபாய், சில சென்ட் பாட்டில்களை எடுத்துக்கொண்டு, கடையை சாத்திவிட்டு சென்றார். சற்று நேரம் கழித்து, இக்காட்சிகளை, ரமேஷ் கிருபாகரன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் புகார்படி, ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.