ADDED : ஏப் 03, 2026 04:19 AM
அ நிறம் | அளவு
தலைவாசல், தலைவாசல், நாவலுாரை சேர்ந்தவர் வீரமணி, 56. சில்லிக்கடை வைத்து தொழில் செய்தார். நேற்று காலை, 9:00 மணிக்கு, வீரகனுார் நோக்கி, 'ஸ்கூட்டி' மொபட்டில், ஹெல்மெட் அணியாமல் புறப்பட்டார்.
வீ.ராமநாதபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் சென்றபோது, சாலை பள்ளத்தில் மொபட்டில் இருந்து தடுமாறி விழுந்த வீரமணி படுகாயம் அடைந்தார். சில நிமிடத்தில் அங்கேயே உயிரிழந்தார். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
