ADDED : செப் 01, 2026 05:53 AM
சேலம்; சென்னை எழும்பூர் -
சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சேலம் நோக்கி வந்தது. ஆத்துார் அருகே
வந்த போது, படிக்கட்டு பகுதியில் நின்றி-ருந்த வாலிபர் ஒருவர் தவறி கீழே
விழுந்தார். இதை பார்த்ததும் பயணிகள் கூச்சலிட்டனர். சேலம் ரயில்வே
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின், எஸ்.எஸ்.ஐ. முருகன்
தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு தவறி விழுந்த
வாலிபர் பலத்த காயமடைந்து சடலமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி, விசாரணை
நடத்தியதில் சேலம் மாவட்டம், ஆத்துார் கொண்டேவலசு பகுதியை சேர்ந்த
சதா-சிவம், 21, என தெரியவந்தது. இவர் சென்னை தாம்பரத்தில் உள்ள, தனியார்
நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும், ஊருக்கு திரும்பி வரும்போது ரயிலில்
இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.வாகனம் மோதி தொழிலாளி பலி
பனமரத்துப்பட்டி, செப். 1
சேலம்,
சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகேசன், 45.
இவர், மல்லுார் அருகே கொட்டாய்வலவு பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி,
வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:40 மணிக்கு
அம்மாபாளையம் பஸ் ஸ்டாப் அருகே, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையை, முருகேசன்
நடந்து கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத
வாகனம், அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை, மல்லுார் போலீசார்
தேடி வருகின்றனர்
