/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்
/
தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்
தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்
தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்
ADDED : நவ 14, 2024 07:46 AM
நாமக்கல்: புத்தாக்க சிந்தனை உள்ள மாணவர்களை, இளம் தொழில் முனைவோராக வளர்த்தெடுக்கும் நடவடிக்கையில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, 'ஸ்டார்ட் அப் சென்னை -செய்க புதுமை' திட்டத்தை, சென்னை
ஐ.ஐ.டி.-எம்., ஆராய்ச்சி பூங்காவில், நேற்று முன்தினம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில், 'தொடக்க நிலை வளர் காப்பகம்'
அமைப்பதற்கான ஒப்புதல் ஆணையையும் வழங்கினார். இதில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லுாரி, 'தொடக்கநிலை வளர் காப்பகம்' அமைக்க உள்ளது. இதற்கான ஆணையை, எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர்
மதன்கார்த்திக், துணை முதல்வர் உதயநிதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து அவர் கூறுகையில், ''கல்வி நிறுவனங்களில் புத்தாக்க சிந்தனை உள்ள மாணவர்களை, இளம் தொழில் முனைவோராக வளர்த்தெடுக்க உதவியாக இருக்கும். மாணவர் குழுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு
பலவிதமான சேவைகள் வழங்கப்படும். தொடக்க நிலை வளர் காப்பக மையம், இக்கல்லுாரியில் குறுகிய காலத்தில் செயல்படும்,'' என்றார்.