UPDATED : அக் 26, 2026 03:12 AM
ADDED : அக் 26, 2026 01:40 AM

சேலம்: ஆர்.எஸ்.எஸ்., தொடங்கப்பட்ட விஜய
தசமி நாளை ஒட்டி, சேலம், குகை மாரியம்மன் கோவில் திடலில், நேற்று மாலை 4:30 மணிக்கு அமைப்பின் காவி கொடி ஏற்றி, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, குகை அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாக குழு தலைவர் கந்தசாமி, தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஏராளமான தொண்டர்கள், பாரம்பரிய வாத்-தியம் முழங்க, சீருடையுடன் மிடுக்காக, நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்று, தாதகாப்பட்டி கேட் சக்தி காளி-யம்மன் கோவிலில் நிறைவு செய்தனர். தொடர்ந்து அதே பகு-தியில் அமைப்பின், 101வது ஆண்டு நிறுவன தினம், விஜயதசமி விழா பொதுக்கூட்டம், லவ் - ஓ., நாகராஜன் தலைமையில் நடந்-தது.ஆர்.எஸ்.எஸ்., வடதமிழகம் மாநில அமைப்பாளர் பிரேஷாப குமார் பேசுகையில், ''தேசம், தர்மம், பண்பாட்டை காக்க சுயநல-மற்ற தொண்டர்களை உருவாக்கும் பணியில், ஆர்.எஸ்.எஸ்., சங்கம், 100 ஆண்டாக சேவை செய்து வருகிறது. அதில் உருவான லட்சக்கணக்கான தொண்டர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேச வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்றனர்,'' என்றார்.
சேலம், 'இஸ்கான்' அமைப்பை சேர்ந்த பூஜ்ய.ஸ்ரீனிவாச கிருஷ்ணா தாஸ், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் பேசினர். சேலம் நகர் தலைவர் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆத்துாரில், ராஜசேகரன் என்பவர், ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் மாணி க்கம் தலைமையில் பலர், ராணிப்பேட்டை, கடைவீதி வழியே காமராஜர் சாலை, 4 ரோடு சந்திப்பு வழியே மீண்டும் பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று நிறைவு செய்தனர். இதை ஒட்டி, கூடுதல் எஸ்.பி., ஆனந்த
குமார் தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜலகண்டாபுரத்தில் சீனிவாசன் என்பவர் தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனை, டவுன் பஞ்சாயத்து அலுவலகம் வழியே ஜலகண்டாபுரம் பஸ் ஸ்டாண்டை அடைந்தது. பின் அங்கு நடந்த கூட்டத்தில், தர்ம விழிப்புணர்வு மாநில அமைப்பாளர் சரவணன் பேசினார். சேலம் எஸ்.பி., குத்தாலிங்கம் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டனர்.
