ADDED : ஜன 22, 2026 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: அம்பேத்கர் மக்கள் மைய நிறுவன தலைவர் சசிகுமார், 53. சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த இவர், 'இந்தியாவில் ஆணவ கொலைகளை தடுக்க, மத்திய அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்' என வலியுறுத்தி, தமிழக கவர்னரிடம் மனு கொடுக்க திட்டமிட்டார்.
அதற்கு மேட்டூரில் இருந்து சென்னைக்கு, 370 கி.மீ., நடைபயணத்தை நேற்று தொடங்கினார்.முன்னதாக சின்னபார்க் அருகே, அவருக்கு வழியனுப்பு விழா நடந்தது. அதில் மாநில மகளிர் அணி செயலர் பூங்கொடி உள்-ளிட்டோர் ஆணவ கொலைகளால் ஏற்படும் அவலங்கள் குறித்து பேசினர். தொடர்ந்து சசிகுமார் நடைபயணமாக சென்றார்.

