ADDED : டிச 14, 2024 01:16 AM
அ நிறம் | அளவு
ஓமலுார், டிச. 14--
சேலம் மாவட்டம் ஓமலுார், காடையாம்பட்டி வட்டாரங்களில், சில வாரங்களாக மழை பெய்து வருவதால் சாமந்தி பூ உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தோட்டங்களில் மழைநீர் தேங்கி வேர் அழுகல் நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. உற்பத்தி குறைந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பூக்களை விற்பனைக்கு கொண்டு வருவதால், விலை குறைவாகவே விற்பனையானது. நேற்று பூசாரிப்பட்டி தினசரி சந்தைக்கு, 7 டன் சாமந்தி பூக்கள் மட்டுமே கொண்டு வந்தனர். கிலோ, 100 முதல், 150 வரை விலைபோனது.
இதுகுறித்து காடையாம்பட்டி விவசாயி சக்திவேல், 40, கூறுகையில், ''கடந்த தீபத்திருவிழாவின்போது கிலோ, 200 ரூபாய் வரை விற்பனையானது. இந்த தீபத்திருவிழாவில் மழையால், பூக்கள் உற்பத்தி மட்டுமின்றி, விற்பனையும் மந்தமாக உள்ளது,'' என்றார்.
