/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சந்தைப்படுத்தல் உத்தி மாணவர்களுக்கு பயிற்சி
/
சந்தைப்படுத்தல் உத்தி மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : பிப் 28, 2026 09:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில், மேலாண்மைத்துறை சார்பில், 'தொடக்க நிறுவனங்களுக்கான பயனுள்ள விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகள்' தலைப்பில், மாணவ, மாணவியருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று நடந்தது.
துறைத்தலைவர் யோகானந்தன் தலைமை வகித்தார். பல்கலை நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணி தொடங்கிவைத்தார்.
'ஏரோஸ்பேஸ்' பிரிவு துணைத் தலைவர் கார்த்திக் அசோகன், சந்தைப்படுத்தலில் வாடிக்கையாளர்களை அடையாளம் காணுதல், சந்தை தேவைகளை புரிந்து கொள்ளுதல், பொருட்களை பயனுள்ள முறையில் விளம்பரப்படுத்தல் உள்ளிட்ட உத்திகளை தெரிவித்தார். உதவி பேராசிரியர்கள் பாலமுருகன், சூர்யகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

