ADDED : மார் 17, 2026 04:23 AM
சேலம்: வாழப்பாடியை சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் சுமித்ரா, 20. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம், மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 14ல் வழக்கமாக கல்லுாரிக்கு சென்ற சுமித்ரா மாலையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல்வேறு இடங்-களில் தேடியும் கிடைக்காததால், காரிப்பட்டி போலீசில் நேற்று முன்தினம் பெற்றோர் அளித்த புகார்படி, போலீசார் வழக்குப்ப-திவு செய்து தேடி வருகின்றனர்.
அதேபோல் ஆட்டையாம்பட்டி கல்பாரப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 42, மனைவி கோமதி, 35. இவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். கடந்த, 12ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற கோமதி பின்னர் திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து பழனிசாமி நேற்று முன்தினம் ஆட்டையாம்பட்டி போலீசில் கொடுத்த புகார்-படி, போலீசார் தேடி வருகின்றனர்.
