/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காளியம்மன் கோவிலில் மாசி திருவிழா :தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள்

ADDED : மார் 05, 2024 02:03 AM
வீரபாண்டி:காளியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி, நேற்று நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
சேலம், ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா எட்டு நாட்கள் சிறப்பாக நடக்கும். நடப்பாண்டு திருவிழா கடந்த பிப்., 28ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று காலை 7:00 மணிக்கு காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள், திருமணிமுத்தாற்றின் கரையில் உள்ள ஆற்றுப்பிள்ளையார் கோவிலில் ஒன்று கூடி புனித நீரை குடங்களில் நிரப்பி பூஜைகள் செய்து மேள தாளங்கள் முழங்க, காளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபி ேஷகம் செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து, கூழ் படைத்தல், மாலையில் உருளு தண்டம், அக்னி கரகம், பூங்கரக ஊர்வலம் போன்ற உற்சவங்களில் ஆர்வத்துடன் பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று நடக்கவுள்ளது.