/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் மாசில்லா தீபாவளி மதநல்லிணக்க கருத்தரங்கம்
/
சேலத்தில் மாசில்லா தீபாவளி மதநல்லிணக்க கருத்தரங்கம்
சேலத்தில் மாசில்லா தீபாவளி மதநல்லிணக்க கருத்தரங்கம்
சேலத்தில் மாசில்லா தீபாவளி மதநல்லிணக்க கருத்தரங்கம்
ADDED : அக் 21, 2025 01:35 AM
சேலம், ஒய்.எம்.சி.ஏ., மற்றும் சேலம் வரலாற்று சங்கம் இணைந்து, 'மாசில்லா தீபாவளி' மற்றும் மத நல்லிணக்க விழாவை முன்னிட்டு கருத்தரங்கம் நடத்தியது.
நிகழ்ச்சிக்கு ஒய்.எம்.சி.ஏ., துணைத் தலைவர் மானுவேல் ஸ்டீபன்ஸ் தலைமை வகித்தார். வரலாற்று சங்கத்தின் தலைவர் ஜெய்சிங் முன்னிலை வகித்தார். ஒய்.எம்.சி.ஏ., பொதுச் செயலாளர் ஜோஸ் வரவேற்று பேசினார்.
கருத்தரங்கில் ஹென்றி கிஷோர், பாலாஜி மற்றும் தேசிய சமூக இலக்கிய பேரவையின் மாநில தலைவர் தாரை.குமரவேலு ஆகியோர் பேசினர். தாரை.குமரவேலு 'புறமாசு, அகமாசு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ஸ்ரீதர், கோவிந்தராஜ், அட்சகத்தலைவர் கார்மேகம் மற்றும் நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக வரலாற்று சங்கத்தின் பொதுச் செயலாளர் பர்ணபாஸ் நன்றி கூறினார்.