ADDED : ஜூலை 20, 2024 09:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், சேலம் சங்கர் நகரில் பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
மண்டல தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில் பயனாளிகளுக்கு சர்க்கரை அளவு, இருதயம், ரத்தம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. 100க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். மண்டல செயலர் மூர்த்தி, பொருளாளர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.