ADDED : நவ 21, 2024 01:29 AM
வீரபாண்டி, நவ. 21-
தமிழக அரசின் பொது சுகாதாரம், ஊரக வளர்ச்சி துறைகள் இணைந்து, வீரபாண்டி வட்டாரத்துக்குட்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை, தனித்துவமிக்க அடையாள அட்டை வழங்கும் முகாமை நேற்று நடத்தின.
வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில், 1,000க்கும் மேற்பட்டோரை, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில், 35 குழந்தைகள் உள்பட, 112 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. 11 பெரியவர்கள், 12 குழந்தைகளுக்கு, அடையாள அட்டைகள் புதுப்பித்து தரப்பட்டன. 5 குழந்தைகளுக்கு மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான சான்றிதழ், 48 குழந்தைகளுக்கு ரயிலில் இலவச பயணம் செய்ய பாஸ், 46 குழந்தைகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், 278 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, 45 குழந்தைகள், 25 பெரியவர்கள், மேல் சிகிச்சைக்கு பரிந்துரை
செய்யப்பட்டனர்.

