ADDED : ஆக 26, 2026 05:36 AM
சேலம்; மருத்துவ டெக்னீஷியன் மாணவன், மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம், பள்ளப்பட்டி ராவனேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்-வராஜ் மகன் நவீன், 24, இவர் ஐந்து ரோடு பகு-தியில் உள்ள, தனியார் நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்சி., எமர்ஜென்ஸி டெக்னீசியன் படித்து வந்தார். படிப்பின் ஒரு பகுதியாக, தனியார் மருத்-துவமனையில் ஐ.சி.யு., பிரிவிலும் பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு வீடு திரும்பிய அவர், உணவு சாப்பிட்டு விட்டு, அவரது தனி அறைக்கு சென்றுள்ளார். நேற்று காலை பார்த்த போது, அவர் வாயிலிருந்து நுரை தள்ளிய நிலையில் இருந்துள்ளார். அரசு மருத்து-வமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து, பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
