ADDED : ஆக 22, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம் நகராட்சி, 13வது வார்டில் அறிவுசார் மையம், நுாலகம் உள்ளது. அங்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் போட்டித்தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டி பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
பயிற்சியாளர் சேவாக்கவுண்டன், போட்டித்தேர்வுக்கு படிக்கும் முறை, தேர்வை எளிதாக கையாளும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். அதேபோல் தினமும் நாளிதழ்களை படிக்க அறிவுறுத்தினார். இதில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக, பயிற்சி அலுவலர் விஜயன், நகராட்சி தலைவர் குணசேகரன், கமிஷனர் காஞ்சனா, மைய பொறுப்பாளர் கலைச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.