/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரும் 5ல் வணிகர் மாநாடு கடைகள் அடைக்கப்படும்
/
வரும் 5ல் வணிகர் மாநாடு கடைகள் அடைக்கப்படும்
ADDED : மே 03, 2025 01:22 AM
சேலம்:
வணிகர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு வரும், 5ல் செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் நடக்க உள்ளது. இதற்காக அன்று, சேலம் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி கூறியதாவது: வணிகர் மாநாட்டில் கலந்து கொள்வதை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் வரும், 5ல் கடைகள் அடைக்கப்பட உள்ளன. இதுகுறித்து நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லீபஜார், செவ்வாய்ப்பேட்டை, டவுன் உள்ளிட்ட மாநகர் பகுதிகள், புறநகரில் கடைகள் அடைக்கப்படும். மாநாட்டில் சேலம் மாவட்டத்தில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.