/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்வரத்து இரட்டிப்பு
/
மேட்டூர் அணை நீர்வரத்து இரட்டிப்பு
ADDED : மே 01, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையில் தீவிரம் அடைந்த கோடை மழையால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 923 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 1,872 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து குடிநீருக்கு, 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
நீர்வரத்து உயர்வால் நேற்று முன்தினம், 107.72 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 107.75 அடியாகவும், 75.20 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 75.25 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது.