/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்வரத்து 17,272 கன அடியாக உயர்வு
/
மேட்டூர் அணை நீர்வரத்து 17,272 கன அடியாக உயர்வு
ADDED : செப் 06, 2024 07:43 AM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து, 17,272 கன அடியாக உயர்ந்தது.
கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் முறையே மொத்த நீர்மட்டம், 65 அடி, 124.5 அடி. கடந்த, 3ல் இரு அணைகளின் நீர்வரத்து முறையே வினாடிக்கு, 8,702, 11,248 கனஅடியாக இருந்தது. நேற்று கபினி நீர்வரத்து வினாடிக்கு, 6,189 கன அடியாக குறைந்தது. அதேநேரம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கே.ஆர்.எஸ்., நீர்வரத்து, 15,597 கன அடியாக உயர்ந்தது. இரு அணைகளில் இருந்து நேற்று, 18,871 கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.
இதனால் நேற்று முன்தினம், 15,888 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 17,272 கன அடியாக நேற்று உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, 19,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால் நேற்று முன்தினம், 116.39 அடியாக இருந்த நீர்மட்டம், 116.24 அடியாக நேற்று சரிந்தது.
மின்னுற்பத்தி அதிகரிப்பு
மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு கடந்த, 3ல், 13,500 கனஅடியாக இருந்தது. இந்த நீர் கடைமடையை சென்றடையாத நிலையில் நேற்று முன்தினம், 19,000 கன அடியாக திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால், 135 மெகாவாட்டாக இருந்த அணை, சுரங்க மின் நிலைய மின் உற்பத்தி, 190 மெகாவாட்டாக உயர்ந்தது. அதேபோல் செக்கானுார் முதல் சோளசிராமணி வரை, 7 கதவணை மின் நிலையங்களில், 35 மெகாவாட் வரை மின் உற்பத்தி அதிகரித்து, 150 முதல், 175 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டது.