/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
300 நாட்களாக 100 அடியில் மேட்டூர் அணை நீர்மட்டம்
/
300 நாட்களாக 100 அடியில் மேட்டூர் அணை நீர்மட்டம்
ADDED : ஆக 18, 2025 03:46 AM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் இன்றுடன், 300ம் நாளாக, 100 அடிக்கு மேல் நீடிக்கிறது. அதேநேரம், 90 நாட்களாக, 110 அடிக்கு மேல் நீடிக்கிறது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழைக்கேற்ப, அணைக்கு நீர்வரத்து இருக்கும். நேற்று முன்-தினம், 6,408 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 7,700 கனஅடியாக அதிகரித்தது. நேற்று கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து வினாடிக்கு, 15,000 முதல், 20,000 கனஅடி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது. அந்த நீர், இரு நாட்களில் வரும் என்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும்.
இதற்கேற்ப நேற்று முன்தினம் வினாடிக்கு, 10,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை டெல்டா நீர் திறப்பு நேற்று காலை, 18,000 கனஅடி; மாலை, 4:00 மணிக்கு, 22,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அந்த நீர், அணை மின் நிலையங்கள் வழியே பாசனத்துக்கும், 500 கனஅடி நீர் கால்வாயிலும் வெளியேற்றப்பட்-டது.
மேலும் கடந்த ஆண்டு நவ., 27ல், 109.87 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 28ல், 110.07 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து கடந்த பிப்., 19 வரை, 84 நாட்களாக, 110 அடிக்கு மேல் நீடித்த அணை நீர்மட்டம், பிப்., 20ல், 109.96 அடியாக சரிந்தது. மீண்டும் கடந்த மே, 21ல், 110.03 அடியாக உயர்ந்த அணை நீர்-மட்டம், தொடர்ந்து, 90 நாட்களாக, இன்று வரை, 110 அடிக்கு மேல் நீடிக்கிறது. மேலும் கடந்த அக்., 22ல், 98.56 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 23ல், 100.01 அடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு அக்., 23 முதல், இன்று வரை, 300ம் நாளாக தொடர்ந்து அணை நீர்மட்டம், 100 அடிக்கு மேல் நீடிக்கிறது. நேற்று மாலை அணை நீர்மட்டம், 118.14 அடி, நீர் இருப்பு, 90.53 டி.எம்.சி.,யாக இருந்தது.