/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்மட்டம் 39 நாட்களில் 23 அடி சரிவு
/
மேட்டூர் அணை நீர்மட்டம் 39 நாட்களில் 23 அடி சரிவு
ADDED : செப் 29, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர் அணை நீர்மட்டம்
39 நாட்களில் 23 அடி சரிவு
மேட்டூர், செப். 29-
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த மாதம், 20ல், 120 அடியாக நீடித்த அணை நீர்மட்டம், 21ல், 119.76 அடியாக சரிந்தது. நேற்று முன்தினம், 98.03 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 97.11 அடியாகவும், 62.31 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 61.15 டி.எம்.சி.,யாகவும் சரிந்தது.
நேற்று முன்தினம் வினாடிக்கு, 2,694 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 2,556 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 39 நாட்களில் அணை நீர்மட்டம், 23 அடி சரிந்துள்ளது.