/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்வரத்து 10,216 கனஅடியாக சரிவு
/
மேட்டூர் அணை நீர்வரத்து 10,216 கனஅடியாக சரிவு
ADDED : ஆக 05, 2025 01:04 AM
மேட்டூர், மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 10,216 கனஅடியாக சரிந்தது.
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மழை தீவிரம் அடைந்து நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த, 29ல், மேட்டூர் அணை நடப்பாண்டு, 4வது முறை நிரம்பியது. அணைக்கு கடந்த, 28 காலை அதிகபட்சமாக வினாடிக்கு, 1.10 லட்சம் கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு, 18,000 கனஅடி, உபரியாக, 92,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
அதன் பின்பு பருவமழை தீவிரம் குறைந்ததால் மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக சரிந்தது. கடந்த, 8 நாட்களுக்கு பின்பு நேற்று முன்தினம் மதியம் அணை நீர்மட்டம், 119.98 அடியாக சரிந்தது. நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு, 14,596 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 10,216 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து விானடிக்கு, 18,500 கனஅடி நீர் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டது. நீர்திறப்பை விட வரத்து குறைவாக இருந்ததால், நேற்று காலை அணை நீர்மட்டம், 119.65 அடியாக மேலும்
சரிந்தது.
நேற்று காலை, 8:00 மணிக்கு கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணையில், 5,615 கனஅடி, கபினியில், 5,000 கனஅடி என மொத்தம் வினாடிக்கு, 10,615 கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதனால், வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்வரத்து
சற்று கூடும்.