ADDED : நவ 05, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்ப்பி-டிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அதிகரித்ததால் நேற்று முன்-தினம் வினாடிக்கு, 9,917 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 11,526 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 12,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்தை விட திறப்பு கூடுத-லாக இருந்ததால் நேற்று முன்தினம், 107.32 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 107.24 அடியாக சரிந்தது.