ADDED : டிச 11, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 5,793 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 6,140 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் குடிநீர், பாசனத்துக்கு திறக்கப்பட்டது.
திறப்பை விட வரத்து கூடுதலாக இருந்ததால், நேற்று முன்தினம், 116.37 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 116.63 அடியாக உயர்ந்தது.