/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்வு
/
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்வு
ADDED : நவ 22, 2024 06:46 AM
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 9,269 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 8,355 கனஅடியாக சரிந்தது.
டெல்டா மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழை நீடிப்பதால், அணையில் இருந்து வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் மட்டும் பாசனத்துக்கு திறக்கப்பட்டது. திறப்பை விட வரத்து கூடுதலாக இருந்ததால் நேற்று முன்தினம், 107.01 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று, 108.32 அடியாக உயர்ந்தது. அதேபோல், 75.47 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 76.04 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. ஒரே நாளில் நீர்மட்டம், 1 அடி, நீர் இருப்பு, 1 டி.எம்.சி., அதிகரித்தது.