/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மீண்டும் சரிய தொடங்கிய மேட்டூர் அணை நீர்மட்டம்
/
மீண்டும் சரிய தொடங்கிய மேட்டூர் அணை நீர்மட்டம்
ADDED : நவ 01, 2024 01:58 AM
மேட்டூர், நவ. 1-
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்தது. கடந்த அக்., 13ல், 6,445 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 14ல், 17,596 கனஅடியாக அதிகரித்தது. அதற்கேற்ப மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்கத்தொடங்கியது. குறிப்பாக, 26ல் மேட்டூர் அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு, 33,148 கனஅடி நீர் வந்தது. இதனால் கடந்த, 13ல், 89.92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம், 108.50 அடியாக உயர்ந்தது.
இந்நிலையில் வினாடிக்கு, 2,500 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 12,000 கன அடியாக அதிகரிப்பட்டது.
அதேபோல் வினாடிக்கு, 10,568 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 8,099 கனஅடியாக சரிந்தது. திறப்பை விட வரத்து குறைவால் நேற்று முன்தினம், 108.50 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 108.22 அடியாக சரிந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரியத்தொடங்கியுள்ளது.