/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர் திறப்பு 12,000 கன அடியாக உயர்வு
/
மேட்டூர் அணை நீர் திறப்பு 12,000 கன அடியாக உயர்வு
ADDED : அக் 31, 2024 06:48 AM
மேட்டூர்,மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால் கடந்த, 26ல் மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 33,148 கனஅடியாக அதிகரித்தது. மழை தீவிரம் குறைந்ததால் நேற்று முன்தினம், 14,273 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 10,568 கனஅடியாக சரிந்தது.
டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழையால், கடந்த, 14ல் வினாடிக்கு, 7,000 கனஅடியாக இருந்த நீர் திறப்பு, 15ல், 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. பின், 26ல் வினாடிக்கு, 2,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்ட நீர்திறப்பு, நேற்று காலை, 8:00 மணி முதல், 12,000 கனஅடியாக உயர்ந்தது. நேற்று முன்தினம், 108.22 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 108.50 அடியாக அதிகரித்தது.