ADDED : டிச 13, 2025 04:58 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை குறைந்ததால் பாசன நீர்-தேவை அதிகரித்துள்ளது.
அதற்கேற்ப கடந்த, 9ல் வினாடிக்கு, 3,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர்திறப்பு, 10ல், 6,000 கன அடி, நேற்று காலை, 11:00 மணிக்கு, 8,000 கனஅடியாக அதிக-ரிக்கப்பட்டது. நேற்று அணைக்கு வினாடிக்கு, 2,432 கனஅடி நீர் வந்தது. வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால், நேற்று முன்-தினம், 116.01 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 115.77 அடியாக சரிந்தது.
