/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் உபரிநீர் வைரன் ஏரிக்கு திறப்பு
/
மேட்டூர் உபரிநீர் வைரன் ஏரிக்கு திறப்பு
ADDED : ஆக 15, 2025 03:03 AM
ஓமலுார், நங்கவள்ளி, பெரிய சோரகையில், 20 ஏக்கரில் உள்ள வைரன் ஏரி நிரம்பினால், 500 விவசாய குடும்பத்தினர் பயன்பெறுவர். இதனால் காவிரி உபரி நீர் திட்டக்குழு விவசாயிகள், மேட்டூர் உபரிநீர் திட்டம் மூலம், வைரன் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் சூரப்பள்ளி பாப்பாத்திக்காட்டில் பிரமாண்ட தொட்டி அமைக்கப்பட்டு, அதில் இருந்து ஒரு பகுதி குழாய் மூலம், வாத்திப்பட்டி ஏரிக்கு தற்போது உபரிநீர் திறந்து விடப்பட்டது. அத்தொட்டியின் மறு பகுதியில் வைரன் ஏரிக்கு தண்ணீர் செல்லும்படி குழாய் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, 2 கி.மீ.,க்கு கால்வாய் வெட்டும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
அப்பணி முடிந்ததால் நேற்று, மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார், வைரன் ஏரிக்கு மேட்டூர் உபரிநீரை திறந்து விட்டார். காவிரி உபரிநீர் திட்டக்குழு விவசாயிகள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், மக்கள் பங்கேற்றனர்.