/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் நீர்மட்டம் 117 அடியாக உயர்வு
/
மேட்டூர் நீர்மட்டம் 117 அடியாக உயர்வு
ADDED : டிச 13, 2024 09:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்; மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழைக்கேற்ப, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். அதன்படி நேற்று அணைக்கு வினா-டிக்கு, 4,727 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
சில நாட்களாக திறப்பை விட வரத்து அதிக-ரிப்பால், கடந்த, 8ல், 116 அடியாக இருந்த நீர்-மட்டம், படிப்படியாக அதிகரித்தது. நேற்று முன்-தினம், 116.86 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று, 117.04 அடியாக உயர்ந்தது. 88.55 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 88.82 டி.எம்.சி.,யாக அதிகரித்-தது.

