/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எம்.ஜி.ஆர்., 109வது பிறந்தநாள் கொண்டாட்டம்
/
எம்.ஜி.ஆர்., 109வது பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : ஜன 18, 2026 06:19 AM

சேலம்: அ.தி.மு.க., நிறுவனர், முன்னாள் முதல்வர், மறைந்த எம்.ஜி.ஆர்., 109வது பிறந்தநாளை ஒட்டி, சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில், அமைப்பு செயலர் செம்மலை தலைமையில் நேற்று, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் சங்ககிரி சுந்தரராஜன், ஓமலுார் மணி, நகர, ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கொங்கணாபுரம், கரட்டூரில், எம்.ஜி.ஆர்., படத்-துக்கு, ஒன்றிய குழு முன்னாள் தலைவர் மணி, மாலை அணிவித்து, ஏராளமானோருக்கு வேட்டி, சேலை வழங்கினார். தொடர்ந்து இனிப்பு, அன்ன-தானம் வழங்கினார். கொங்கணாபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இடைப்பாடியில் நகர செயலர் முருகன், எம்.ஜி.ஆர்., படத்துக்கு மாலை அணிவித்தார். நக-ராட்சி முன்னாள் தலைவர் கதிரேசன், கவுன்சிலர் நாராயணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேட்டூர் நகர செயலர் சரவணன் தலைமையில் சின்னபார்க்கில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு மாலை அணிவித்து, கட்சி நிர்வாகிகள் இனிப்பு, சர்க்கரை பொங்கல் வழங்கினர்.
மேச்சேரியில் பேரூர் செயலர் குமார், ஒன்றிய செயலர்கள் செல்வம், சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், கொளத்துாரில் பேரூர் செயலர் ராஜ-ரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கொண்டா-டினர்.
அயோத்தியாப்பட்டணத்தில் தெற்கு ஒன்றிய செயலர் ராஜ
சேகரன் தலைமையில், எம்.ஜி.ஆர்.,
படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டு நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாசி-நாயக்கன்பட்டியில், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி சேலம் புறநகர் மாவட்ட செயலர் அருண்குமார் தலைமையில், கேக் வெட்டி இனிப்பு வழங்கப்பட்-டது. அம்மா பேரவை இணை செயலர் ஹரி, மாவட்ட பிரதிநிதி வேணுகோபால், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் பழனிவேல் உள்ளிட்ட
நிர்வாகிகள் பங்கேற்றனர்.

