/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 09, 2026 04:44 AM
சங்ககிரி: பால் உற்பத்தியாளர், பால் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், சங்ககிரி, வேலம்மாவலசில் நேற்று, கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்ககிரி தாலுகா செயலர் சத்தியராஜ் தலைமை வகித்தார்.
அதில் லிட்டர் எருமைப்பாலுக்கு, 60 ரூபாய், பசும்பாலுக்கு, 45 ரூபாயாக உயர்த்தி வழங்குதல்; பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு வழங்குதல்; குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தில் பால், அதன் உப பொருட்களை சேர்த்தல்; மாடு வாங்க, 50 சதவீத மானியத்தில் வட்டி இல்லாத கடனாக, ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்குதல்; கால்நடைகளுக்கு, 50 சதவீத மானியத்தில் தீவனங்கள் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதேபோல் பள்ளக்காடு, பறையங்காட்டானுார் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

