/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.23 கோடியில் 402 புது மின்மாற்றிகள் மின் சிக்கன வார விழாவில் அமைச்சர் தகவல்
/
ரூ.23 கோடியில் 402 புது மின்மாற்றிகள் மின் சிக்கன வார விழாவில் அமைச்சர் தகவல்
ரூ.23 கோடியில் 402 புது மின்மாற்றிகள் மின் சிக்கன வார விழாவில் அமைச்சர் தகவல்
ரூ.23 கோடியில் 402 புது மின்மாற்றிகள் மின் சிக்கன வார விழாவில் அமைச்சர் தகவல்
ADDED : டிச 18, 2025 04:49 AM
சேலம்: சேலத்தில் மின் சிக்கன வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அய்யந்திருமாளிகையில் தொடங்கிய ஊர்வலம், ஏற்காடு பிரதான சாலை வழியே வந்து அஸ்தம்பட்டி சந்திப்பில் நிறைவடைந்தது.
பின் அமைச்சர் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் இதுவரை மின்னகம் மூலம் பெறப்பட்ட, 92,629 புகார்
களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் சீரான மின் வினியோகம் வழங்க, 23.06 கோடி ரூபாய் மதிப்பில், 402 புது மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன. சூரியசக்தி மின் திட்டம் மூலம், 2,539 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மின்சிக்கன பாதுகாப்பை கையாள, ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற நட்சத்திர குறியீடு கொண்ட சாதனங்களை பயன்படுத்தவும், ஆளில்லாத அறைகளில் இயங்கும் மின்
விசிறி, விளக்குகளை அணைத்து வைக்கவும் வேண்டும். வீடுகளில் பிரதான, சுவிட்ச் போர்டில், ஆர்.சி.சி.பி.,யை பொருத்தி மின்கசிவு விபத்தை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மும்முனை மின்சாரத்தில் பம்பு செட்டை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை மேயர் சாரதாதேவி, மின் மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு உள்பட உடனிருந்தனர்.
அதேபோல் ஓமலுார் கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணியை, கோட்ட அலுவலகத்தில் மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் தாரணி தொடங்கி வைத்தார். அதில் அலுவலர்கள், ஊழியர்கள், மின் சிக்கனம் குறித்த பதாகைகளை ஏந்தி, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் வழியே சென்று, மீண்டும் தொடங்கிய இடத்தில் நிறைவு செய்தனர். கோட்ட செயற்பொறியாளர் உமாராணி, உதவி இயக்குனர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

