/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாய்கள் கடித்ததில் கோவில் கன்றுக்குட்டி பலி இணை கமிஷனர் விசாரிக்க அமைச்சர் உத்தரவு
/
நாய்கள் கடித்ததில் கோவில் கன்றுக்குட்டி பலி இணை கமிஷனர் விசாரிக்க அமைச்சர் உத்தரவு
நாய்கள் கடித்ததில் கோவில் கன்றுக்குட்டி பலி இணை கமிஷனர் விசாரிக்க அமைச்சர் உத்தரவு
நாய்கள் கடித்ததில் கோவில் கன்றுக்குட்டி பலி இணை கமிஷனர் விசாரிக்க அமைச்சர் உத்தரவு
ADDED : நவ 14, 2024 07:47 AM
சேலம்: நாய்கள் கடித்ததில் சுகவனேஸ்வரர் கோவிலில் கிடா கன்றுக்குட்டி பலியான நிலையில், அங்குள்ள பராமரிப்பு குறித்து அளிக்கப்பட்ட புகாரால், இணை கமிஷனர் விசாரிக்க, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கோசாலையில் மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. அங்கு நேற்று காலை, 5:00 மணிக்கு, 5 மாத கிடா கன்றுக்குட்டியை நாய் கடித்தது. கோவில் நிர்வாகத்தினர்
தகவல்படி, கால்நடை மருத்துவர் வந்து சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் கன்றுக்குட்டி இறந்தது. கால்நடை மருத்துவமனை முதன்மை மருத்துவர் பரணிதரன் உள்ளிட்ட குழுவினர், கன்றுக்குட்டி உடலை பிரேத
பரிசோதனை செய்தனர்.இதுகுறித்து பரணிதரன் கூறுகையில், ''கிடா கன்று குட்டியை இரண்டு, நாய்கள் சேர்ந்து கடித்திருக்கலாம், அதனால் கன்றுக்குட்டியின் கழுத்துப் பகுதியில் அதிகளவில் காயம் ஏற்பட்டுள்ளது. பரிசோதனை முடிந்த
பின் முழு விபரம் தெரியவரும்,'' என்றார்.இதனிடையே சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், மின்னஞ்சல் மூலம் கால்நடை, அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார். அதில், 'சுகவனேஸ்வரர் கோவிலில் தற்போது கோ பூஜை நடத்துவதில்லை.
இதனால் சரிவர பராமரிப்பு இல்லாததே, இதுபோன்ற இறப்புக்கு காரணம். அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். இந்நிலையில் சுகவனேஸ்வரர் கோவில், கோசாலை தொடர்பாக
விசாரித்து அறிக்கை அளிக்க, சேலம் இணை கமிஷனர் சபர்மதிக்கு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

