ADDED : அக் 02, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாநகராட்சி மூக்கனேரி மற்றும் போடிநாயக்கன்பட்டி ஏரிகளில் நடந்து வரும் பணிகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலத்தில் உள்ள மூக்கனேரியில் ரூ.23 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. சூரமங்கலம் மண்டலம், போடிநாயக்கன்பட்டி ஏரியில் ரூ.19 கோடியில் புனரமைக்கும் பணிகளும், அழகுபடுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.
கரைகளை வலுப்படுத்தி, பூங்கா அமைத்தல், பறவைகள் வந்து செல்ல மண் திட்டுகள் அமைத்தல், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை அமைக்கும் பணிகளை, நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு நடத்தினார்.
மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.