/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏத்தாப்பூர் முருகன் கோவிலில் அமைச்சர் முத்துசாமி வழிபாடு
/
ஏத்தாப்பூர் முருகன் கோவிலில் அமைச்சர் முத்துசாமி வழிபாடு
ஏத்தாப்பூர் முருகன் கோவிலில் அமைச்சர் முத்துசாமி வழிபாடு
ஏத்தாப்பூர் முருகன் கோவிலில் அமைச்சர் முத்துசாமி வழிபாடு
ADDED : ஆக 23, 2025 02:05 AM
ஆத்துார் :அமாவாசையை ஒட்டி, சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலுக்கு நேற்று மாலை, 6:50 மணிக்கு, தி.மு.க.,வை சேர்ந்த, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்து சாமி வந்தார். இரவு, 7:00 மணிக்கு, மூலவர் முத்துமலை முருகனை வழிபட்டு, 146 அடி உயர முருகன் சிலை பாதத்தை தொட்டு வணங்கினார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில், அமைச்சர் முத்துசாமிக்கு மாலை அணிவித்து, பூஜை செய்து பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''ஈரோடு, திண்டலில் உள்ள வேலாயுதசுவாமி கோவிலில், முருகன் சிலை, ராஜகோபுர கட்டுமான பணி மேற்கொள்ள, அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது. 207 அடி உயரத்தில், மிகப்பெரிய முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிக்கு முன், ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கட்டுமானப்பணி குறித்து பார்வையிட வந்தேன்,'' என்றார்.