/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எம்.ஐ.எஸ்., அனலிஸ்ட் விண்ணப்பம் வரவேற்பு
/
எம்.ஐ.எஸ்., அனலிஸ்ட் விண்ணப்பம் வரவேற்பு
ADDED : நவ 07, 2024 05:44 AM
சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
சேலம் மாவட்ட இயக்க மேலாண்மை அல-கு, மகளிர் திட்ட அலுவலகத்தில் ஒரு எம்.ஐ.எஸ்., அனலிஸ்ட் பணி உள்ளது. தற்-காலிக பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பி.இ., அல்லது பி.டெக்கில் கணினி அறிவியல் அல்லது ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது முதுநிலை கம்ப்யூட்டர் அப்-ளிகேஷன் அல்லது முதுநிலை அறிவியல்(ஐ.டி.,), கணினி அறி-வியல் அல்லது இதர முதுநிலை கணினி அறிவியல் தொடர்பான படிப்புகள் படித்திருக்க வேண்டும். 30 வயதுக்கு உட்பட்டவரா-கவும், 3 ஆண்டு அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். மாத ஊதியம், 25,000 ரூபாய் வழங்கப்படும். விண்ணப்பங்களை வரும், 15க்குள் நேரிலோ அல்லது, 'இணை இயக்குனர்/திட்ட இயக்குனர், அறை எண், 207, மாவட்ட மேலாண்மை அலகு, கலெக்டர் அலுவலக வளாகம், சேலம் - 636001' என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அனுப்ப வேண்டும்.