ADDED : மார் 22, 2026 08:01 AM
சேலம்:சேலம்,
ஜாகீர் அம்மாபாளையம், சின்ன அம்மா பாளையத்தை சேர்ந்தவர்
முனுசாமி, 45. இவரது மனைவி, சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.
இவர்களது மகன் கிேஷார், 6. அத்துடன், 3 பெண்குழந்தைகள் உள்ளனர். அனைவரும் ஜட்ஜ் சாலையில் உள்ள ஆசிரமத்தில் தங்கி படித்து வந்தனர்.
இந்நிலையில், 1ம் வகுப்பு மாணவரான கிேஷார் சரியாக படிக்காததால் இரு மாதங்
களுக்கு
முன், வீட்டுக்கு வந்து முனுசாமியுடன் இருந்தார். அடிக்-கடி
பக்கத்தில் உள்ள பெரியம்மா துர்கா வீட்டுக்கு, சிறுவன் சென்று வந்தான்.
நேற்று முன்தினம் முதல், அவனை காண-வில்லை. இந்நிலையில் அதே பகுதியை
சேர்ந்த அவரது நண்பன், பக்கத்தில் உள்ள கோபால் கிணற்றில் மீன் பிடிக்க
சென்றபோது கிேஷார் தவறி விழுந்ததாக தெரிவித்தான்.
இதுகுறித்து
தகவல் கிடைக்க, நேற்று இரவு, 8:30 மணிக்கு சூரமங்கலம் தீயணைப்பு
துறையினர், அங்கு சென்று, 2 மணி நேரதேடுதலுக்கு பின், கிேஷார் சடலத்தை மீட்டனர். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
