sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாயமான முதியவர் சடலமாக மீட்பு

மாயமான முதியவர் சடலமாக மீட்பு

மாயமான முதியவர் சடலமாக மீட்பு


ADDED : பிப் 26, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 05:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெத்தநாயக்கன்பாளையம்: ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 60. இவரது மனைவி நீலா, 58. இவர்கள் குடும்பத்துடன், சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முருகன் கோவிலுக்கு, கடந்த டிச., 29ல் வந்தனர். மீண்டும் வீட்டுக்கு புறப்படும்போது சுந்தரமூர்த்தி மாயமானார். இதுகுறித்து டிச., 31ல் நீலா, ஏத்தாப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை, அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டம் அருகே, அடையாளம் தெரியாத உடல், அழுகிய நிலையில் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று, உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இரு மாதங்களுக்கு முன் மாயமான சுந்தரமூர்த்தி என தெரியவந்தது. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். விவசாய தோட்டம் அருகே சென்றபோது மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us