தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாயமானவர் ராசிபுரத்தில் சடலமாக மீட்பு

மாயமானவர் ராசிபுரத்தில் சடலமாக மீட்பு

மாயமானவர் ராசிபுரத்தில் சடலமாக மீட்பு


ADDED : மார் 14, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்: சேலம், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 40; திரும-ணமாகவில்லை. பி.இ.,-- எம்.பி.ஏ., படித்த இவர், கனடாவில் வேலை பார்த்து வந்தார். இரண்டு ஆண்டுகளாக சேலத்தில், தந்தை ஆறுமுகத்துடன் வசிக்காமல், தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

கடந்த பிப்., 16 முதல் சரவணனை காணவில்லை. அவரது பெற்றோர் அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார், சரவ-ணனை தேடி வந்தனர்.இந்நிலையில், ராசிபுரம்-காட்டூர் சாலையில் உள்ள ஒரு காலி பிளாட்டில் ஒருவர் சடலமாக கிடப்பதாக, ராசிபுரம் போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் மாயமான சரவணன் என்பதும், இறந்து இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர். ராசிபுரம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us