ADDED : செப் 12, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
வாழப்பாடி; பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்லேரிப்பட்-டியை சேர்ந்த, ராமு மனைவி பூங்காவனம், 75. இவர் கடந்த, 9 காலை மாயமானார்.
அவரது மகள் மணி, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்தனர். இந்நி-லையில் நேற்று, அதே பகுதியை சேர்ந்த தம்பி ராஜா, 70, என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், பூங்காவனம் உடல் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு, தீயணைப்பு வீரர்கள் சென்று, கயிறு மூலம் கிணற்றில் இறங்கி, பூங்-காவனம் சடலத்தை மீட்டு, போலீசாரிடம் ஒப்ப-டைத்தனர். எப்படி இறந்தார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.
