ADDED : ஜன 04, 2026 05:05 AM
பனமரத்துப்பட்டி: அ.தி.மு.க.,வின், வீரபாண்டி தொகுதி, எம்.எல்.ஏ., ராஜமுத்து அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் முதன்முதலில், வீரபாண்டி தொகுதி கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், ஜன., 4(இன்று) மாலை, 5:00 மணிக்கு நடக்கும், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார சுற்றுப்பயண பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., பேசுகிறார்.
அதில் தொகுதிக்கு உட்பட்ட, 50,000 பேர் பங்கேற்கவும், அவர்களுக்கு இருக்கை, மருத்துவ வசதி, சிற்றுண்டி, குடிநீர், கழிப்பறை உள்-ளிட்ட வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், மாநில, மாவட்ட நிர்-வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய செயலர்கள் பங்கேற்கின்-றனர். மேலும் பொதுச்
செயலர், இ.பி.எஸ்.,சை வரவேற்க, மக்கள் பிரதிநிதிகள், மாநில, மாவட்ட ஒன்றிய, கிளை நிர்வாகிகள், மகளிர் அணி, மாணவர் அணி, இளைஞர் அணி, நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வர வேண்டும்.
