ADDED : பிப் 10, 2026 08:55 AM
அ நிறம் | அளவு
சங்ககிரி: சங்ககிரி நகராட்சி, 1வது வார்டு பொந்துகிணறு பகுதியில், 7.90 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை பணிக்கு பூமிபூஜை விழா நேற்று நடந்தது. சங்ககிரி எம்.எல்.ஏ., சுந்தரராஜன், பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் செல்லப்பன், அ.தி.மு.க.,வின், நகர செயலர் சங்கர், முன்னாள் செயலர் செல்வம், சேலம் புறநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலர் சிவக்குமாரன், சங்ககிரி கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலர் கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
